MARC காட்சி

Back
தீபப்பிரகாசப் பெருமாள் கோவில்
245 : _ _ |a தீபப்பிரகாசப் பெருமாள் கோவில் -
246 : _ _ |a திருத்தண்கா
520 : _ _ |a தண் என்றால் குளிர்ச்சி. கா என்றால் சோலை. குளிர்ச்சி பொருந்திய சோலையைத் தெரிவு செய்து பிரம்மன் வேள்விச்சாலை அமைத்த இடமாதலால் திருத்தண்கா என்றாயிற்று. திருமங்கையாழ்வாரால் மட்டும் 2 பாக்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். தலைப்பிலிட்ட பாடலில் இப்பெருமாளின் திருநாமமான விளக்கொளியையும், பிராட்டியின் திருநாமமான மரகதவல்லி என்பதையும் இத்திவ்ய தேசத்தின் திருநாமமான திருத்தண்கா என்பதையும் ஒரே வரியில் முறைப்படுத்தி மங்களாசாசனம் செய்துள்ளார் திருமங்கை. திருவேங்கடத்து எம்பெருமானையே ஈண்டு கண்டதாக திருமங்கை மங்களாசாசனம் செய்துள்ளார். வைணவ சம்பிரதாயத்தில் பாஷ்யகார சித்தாந்தம் என்பதைப் போதித்த மாமேதை ஸ்ரீஸ்வாமி தேசிகன் இங்குதான் அவதரித்தார். அதாவது (இத்தலம்) தூப்புல் என்னும் பகுதியே அவரது அவதார ஸ்தலமாகும்.
653 : _ _ |a கோயில், வைணவம், பெருமாள், திருத்தண்கா, காஞ்சிபுரம், திருமங்கையாழ்வார், திருப்பதி, தூப்புல், ஸ்ரீசுவாமி தேசிகன், விளக்கொளி பெருமாள் கோயில், தீபப்பிரகாசப் பெருமாள்
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு
909 : _ _ |a 2
910 : _ _ |a 1200 ஆண்டுகள் பழமையானது. திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற திருப்பதி.
914 : _ _ |a 12.8244283
915 : _ _ |a 79.7051869
916 : _ _ |a தீபப் பிரகாசர், விளக்கொளிப் பெருமாள் திவ்யப் பிரகாசர்
918 : _ _ |a மரகதவல்லி
923 : _ _ |a சரஸ்வதி தீர்த்தம்
925 : _ _ |a நான்கு கால பூசை
926 : _ _ |a வைகுண்ட ஏகாதசி, இராமநவமி, நவராத்திரி
928 : _ _ |a இங்குள்ள வேதாந்த தேசிகரின் சன்னதியில் உட்புறச் சுவர்களில் எல்லாம் ஸ்வாமி தேசிகனின் ஜெனனம் முதலான வரலாற்றை சித்தரிக்கும் நிகழ்ச்சிகள் அழகோவியமாகத் தீட்டப்பட்டுள்ளன.
929 : _ _ |a இச்சன்னதியில் தேசிகன் ஞான முத்திரையோடு எழுந்தருளியுள்ளார். இங்குள்ள ஸ்வாமி தேசிகனின் திருமேனியை அவரது குமாரர் நயினவராதாச்சாரியார் தான் பிரதிஷ்டை செய்தார். ஸ்ரீஸ்வாமி தேசிகர் தனது வாழ்நாளெல்லாம் வைத்து வழிபட்ட திருவாராதனப் பெருமாளான ஸ்ரீலெட்சுமி ஹயக்ரீவர் தற்போது இச்சன்னதியில்தான் உள்ளார். தேசிகன் சன்னதி தெற்கு நோக்கி அமைந்ததாகும்.
930 : _ _ |a இத்தலம் பற்றி பிரம்மாண்டபுராணத்தில் விரித்துரைக்கப்பட்டுள்ளது. பிரம்மன் தொடர்ந்து யாகம் நடத்தினான். (மும்மூர்த்திகள் தமது துணைவியரின்றி தொடர்ந்து செயல்பட முடியும் என்பதைக் காட்ட பிரம்மன் தனது தேவியின் துணையின்றி இவ்விடத்தில் யாகத்தை துவக்கினான்) பிரம்மனின் யாகத்தை தொடரவிடாமல் அதனைத் தகர்க்க எத்தனையோ முயற்சிகள் செய்தும், அத்தனையும் பயனின்றிப் போகவே இனிமேல் என்ன செய்யலாம் என்று தீவிரமாகச் சிந்தித்து இந்த உலகத்தையே இருட்டில் மூழ்கடிக்க எண்ணினாள். உடனே சூரிய, சந்திரர்களின் ஒளியை இழக்கச் செய்து பூவுலகை இருளில் ஆழ்த்தினாள். திடீர் இருட்டிற்கான காரணத்தை தமது ஞான திருஷ்டியால் உணர்ந்த பிரம்மன், வழக்கம்போல் உதவி வேண்டி மகாவிஷ்ணுவைத் துதித்தார். உடனே மஹாவிஷ்ணு (அன்றையதினமான சித்திரை மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று) ஜோதி மயமாய்த் தோன்றி பிரம்மனின் யாகத்தை தொடர்வதற்கு ஒளி கொடுத்து சூரிய சந்திரர்களின் ஒளியை மறைத்த தடையை நீக்கி உலகத்தை மீண்டும் வெளிச்சத்தின் மடியில் வைத்தார் ஜோதிமயமான வெளிச்சத்தில் தனது யாகத்தை தொடர்ந்தான் பிரம்மன். யாக சாலையை மேலும் விரிவு படுத்த எண்ணிய பிரம்மன் விஸ்வகர்மாவை நினைக்க தேவர்கள் புடைசூழ வந்த விஸ்வகர்மா யாக சாலையை மிக நுட்பம் வாய்ந்ததாக அமைத்துக் கொடுத்தான். விஸ்வகர்மாவுடன் தேவர்கள் வந்ததைக் கண்ட அசுரர்கள் தாமும் கூட்டம் கூட்டமாய் அவர்களைப் பின் தொடர ஆரம்பித்தனர். ஆனால் பிரம்மனோ தேவர்களை மட்டும் எதிர்கொண்டழைத்து அசுரர்களை கண்டும் காணாமல் இருந்ததால் அவர்கள் மிகவும் சினங்கொண்டனர். யாக சாலையை விட்டு வெளியேறிய அவர்கள் பிராமண வடிவம் கொண்டு நேராக சரஸ்வதிதேவியின் இருப்பிடம் வந்து சேர்ந்தனர். பத்னி இல்லாமல் யாகம் செய்ய பிரம்மன் தனது மமதையால் தங்களைப் பழித்துச் செயல்படுவது போலல்லவா இது இருக்கிறது என்று பலவிதமாகக் கூறி வாணியின் கோபத்தைக் கிளற மிகவும் சினந்த சரஸ்வதி நானும் பலவிதமான முயற்சிகள் செய்துவிட்டேன். என்ன செய்யலாமென நீங்கள் கூறுங்கள் என்று கேட்க, அதற்கவர்கள் கொடிய அரக்கன் ஒருவனை அக்னி பிழம்பாய் படைத்து அனுப்பினால் அவன்யாக குண்டலியின் வேள்வித் தீயைத் தன்னுள் கிரஹித்துக் கொண்டு வந்துவிடுவான் என்று சொல்ல தன் சக்தி முழுவதையும் பிரயோகித்து ஒரு கொடிய அரக்கனைப் படைத்தாள் சரஸ்வதி. மாயநலன் என்பது அவனது பெயர். கொடிய அக்கினி ரூபத்தில் யாகத்தை அழிக்க வந்த அந்த அக்கினி ரூப அசுரனை அவ்விடத்தில் பிரவேசித்த பெருமாள் தனது கையில் தீபம் போல் ஏந்தி யாகசாலைக்கு மேலும் வெளிச்சம் நல்கினார். இவ்வாறு அக்கினியைக் கையில் தீபம் போல் ஏந்தி நின்றதால் தீபப் பிரகாசர் ஆனார். தூய தமிழில் விளக்கொளிப் பெருமாள் ஆனார். மாயநலன் என்னும் அசுரனைப் படைத்தனுப்பி அவன் எவ்விதம் யாகத் தீயைக் கிரஹித்துப் போகிறான் என்பதைக் காண சரஸ்வதி பின் தொடர மாயநலனை தீபம் போல் பெருமாள் ஏந்த, அந்த திருக்கோலத்தில் பெருமாள் சரஸ்வதி தேவிக்கு இங்கு காட்சி கொடுத்ததாக ஐதீஹம். பின்னால் பிரம்மனின் யாகத்தை தடுக்க முடியாமல் போய் தனது தவறுணர்ந்து பிரம்மனோடு ஐக்கியமாகிய பின்பு இவ்விடத்தில் சரஸ்வதி தேவியே தீர்த்தமாக அமைந்து எம்பெருமான் தன் கரத்தில் அக்னியை ஏந்திய கடூரம் நீங்க குளிர்ந்த தீர்த்தமாக மாறி இவ்விடத்தில் நிலை பெற்றாள் என்றும் கூறுவர்.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a வரதராஜப் பெருமாள் கோயில், வைகுண்டப் பெருமாள் கோயில், ஏகாம்பரேசுவரர் கோயில், காமாட்சியம்மன் கோயில்
935 : _ _ |a காஞ்சி மாநகரிலேயே அமைந்துள்ளது. அட்ட புயக்கர சன்னதியிலிருந்து மேற்குத் திக்கில் சுமார் அரை மைல் தொலைவில் உள்ளது.
936 : _ _ |a காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
937 : _ _ |a காஞ்சிபுரம்
938 : _ _ |a காஞ்சிபுரம்
939 : _ _ |a சென்னை - மீனம்பாக்கம்
940 : _ _ |a காஞ்சிபுரம் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000186
barcode : TVA_TEM_000186
book category : வைணவம்
cover images TVA_TEM_000186/TVA_TEM_000186_திருத்தண்கா_தீபப்பிரகாசப்பெருமாள்-கோயில்-0002.jpg :
Primary File :

TVA_TEM_000186/TVA_TEM_000186_திருத்தண்கா_தீபப்பிரகாசப்பெருமாள்-கோயில்-0001.jpg

TVA_TEM_000186/TVA_TEM_000186_திருத்தண்கா_தீபப்பிரகாசப்பெருமாள்-கோயில்-0002.jpg

TVA_TEM_000186/TVA_TEM_000186_திருத்தண்கா_தீபப்பிரகாசப்பெருமாள்-கோயில்-0003.jpg

cg103v079.mp4